தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் தான் விஜய். அவர் நடிப்பில் வெளியாகிய பல திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. இவரது நடிப்பில் லியோ என்னும் திரைப்படம் உருவாகி வருகின்றது. இப்படம் அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. இப்படம் குறித்த அப்டேட்டுக்களும் அடிக்கடி வெளியாகிக் கொண்டிருக்கின்றது.
இதனை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் குறித்த அப்டேட்டும் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் லட்சக்கணக்கான ரசிகர்களை வைத்திருக்கும் விஜய் சோசியல் மீடியாக்களில் அதிகமாக இல்லாதவராகவும் இருந்து வருகின்றார். டுவிட்டரில் மட்டும் இருந்த வந்த இவர் தற்பொழுது இன்ஸ்டாகிராமில் புதிய கணக்கை தொடங்கியுள்ளார்.
விஜய் கணக்கு தொடங்கிய சில மணி நேரங்களுக்குள் லட்சக்கணக்கான ரசிகர்கள் அவரை பின் தொடர ஆரம்பித்தனர். இவரை அடுத்து தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகி தற்போது பிரபல நடிகராக வலம் வரும் எஸ்.ஜே சூர்யா இன்ஸ்டாகிராமில் புதிய கணக்கை தொடங்கியுள்ளார். அவர் நடித்துள்ள பொம்மை படத்தின் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!