• Nov 19 2024

மறைந்த நடிகர் 'பூ'ராமுவின் இறுதி ஊர்வலத்தில் பறை அடித்துக் கொண்டு சென்ற பிரபல நடிகர்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய குணச்சித்திர நடிகராக வலம் வந்தவர் தான் 'பூ' ராமு. இவர் இயக்குநர் சசி இயக்கத்தில் வெளியான 'பூ' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக 'பூ' ராமு என திரையுலகினரால் அறியப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து நீர்ப்பறவை, தங்க மீன்கள், பரியேறும் பெருமாள், சூரரைப் போற்று மற்றும் கர்ணன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கின்றார்.

மேலும் இவருக்கு நேற்றைய தினம் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக சென்னை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கே அவருக்கு சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்திருந்தனர்.

மேலும் இவரது மறைவிற்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வந்தனர். #RIPPooRamu எனும் ஹாஷ்டேக்கை போட்டு பூ ராமுவின் மரண செய்தியை பகிர்ந்து தனது ஆழ்ந்த இரங்கலை நடிகர் விஜய்சேதுபதி தெரிவித்து இருந்தார். கர்ணன் பட இயக்குநர் மாரி செல்வராஜ் "போய் வாருங்கள் தோழர்" என உருக்கமாக ட்வீட் போட்டு தனது மனவேதனை வெளிப்படுத்தி இருந்தார்.

இந்நிலையில், நடிகர் காளி வெங்கட் செய்த செயல் பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. அதாவது ஊரப்பாக்கம், பெரியார் நகரில் உள்ள அவரது வீட்டுக்கு 'பூ' ராமுவின் உடல் கொண்டு செல்லப்பட்டு இன்றைய தினம் மதியம் அவரது இறுதிச் சடங்கு நடைபெற்றது.

அதில், கலந்து கொண்ட நகைச்சுவை நடிகர் காளி வெங்கட் பறை அடித்து இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற வீடியோ ரசிகர்களை உணர்ச்சி வசப்படுத்தி உள்ளது. முன்னதாக 'பூ' ராமு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்கிற விஷயத்தையே இவர் தான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement