நடிகர் அஜித் நடிப்பில் இறுதியாக வெளியாகிய துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.இதனை அடுத்து இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்னும் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். வி செண்ட்டிமெண்ட்படி இந்தப் படத்தின் பெயர் வைக்கப்பட்டிருப்பதால் நிச்சயம் படம் ஹிட்டாகும் என ரசிகர்கள் கூறி வருவதுமுண்டு.
ஷீட்டிங் ஆரம்பமாக தாமதமாவதால் அஜித் தனது முதல்கட்ட வேர்ல்ட் டூரை அண்மையில் தொடங்கினார். நேபாளம், பூடான் உள்ளிட்ட பகுதிகளில் ரைட் செய்த அவர் சில மாதங்களுக்கு முன்பு பயணத்தை முடித்து சென்னை திரும்பினார். இதனை அடுத்து அடுத்த சுற்றுப்பயணத்தை நவம்பர் மாதம் தொடங்குவார் எனவும் தகவல் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில் விடாமுயற்சியில் இருந்த அத்தனை சிக்கல்களும் தீர்ந்துவிட்டதாகவும்; விரைவில் ஷூட்டிங் தொடங்கும் என்றும் கூறப்பட்டது. ஆனால் இன்னமும் அடுத்ததாக ஒரு அடிகூட படக்குழு எடுத்து வைக்கவில்லை. இதனால் விடாமுயற்சிக்கு என்னதான் ஆச்சு என்று ரசிகர்கள் புலம்பிக்கொண்டிருக்க அஜித்தோ வளைகுடா நாடுகளில் பைக் சுற்றுப்பயணத்தில் இருக்கிறார்.
இதனால் இந்த மாதத்தின் இறுதியிலோ அல்லது அடுத்த மாதத்தின் தொடக்கத்திலோ விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் அபுதாபியில் தொடங்கலாம் என்று தகவல் வெளியானது. அதுமட்டுமின்றி இந்தப் படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன் தாஸ், த்ரிஷா, ஹுமா குரேஷி உள்ளிட்டோரும் கமிட்டாகியிருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் விடாமுயற்சி குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி படத்தின் ஷூட்டிங் தொடங்க இன்னும் தாமதமாகும் சிக்னல்கள் தெரிவதால் இந்தப் படத்திலிருந்து அர்ஜுன் தாஸ் விலகிவிட்டதாகவும் அவருக்கு பதிலாக பிக்பாஸ் பிரபலமான நடிகர் ஆரவ் நடிக்கவிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
Listen News!