• Nov 17 2024

ரோபோ ஷங்கரின் உடல் எடை குறைந்ததற்கான உண்மைக்காரணத்தை சொன்ன பிரபல நடிகர்- அப்போ அவரது மனைவி சொன்னது பொய்யா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் காமெடியனாக தனது கெரியரை ஆரம்பித்து தற்பொழுத வெள்ளித்திரையில் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக வலம் வருபவர் தான் ரோபோ சங்கர். இவர் தமிழில் அனைத்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களிலும் நடித்திருக்கின்றார். தற்பொழுதும் பிஸியாக நடித்து வருகின்றார்.

இந்த நிலையில் சமீபகாலமாக பல சர்ச்சைகளிலும் சிக்கி வருகின்றார். அந்த வகையில் தற்பொழுது இவரைப் பற்றி ஒரு தகவல் திடீரென வைரலாகி வருகின்றது.என்ன விஷயம் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான்.


அதாவது அவர் உடல்எடை மிகவும் குறைந்து காணப்படுகிறார், அவரது மனைவி ஒரு படத்திற்காக தான் இப்படி உடல் எடை குறைத்து வருகிறார் வேறு ஒன்றும் இல்லை என ஒரு பேட்டியில் கூறியிருந்தார் என செய்திகள் வெளியானது.நடிகர் ரோபோ ஷங்கரின் நெருங்கிய நண்பரான போஸ் வெங்கட் அவரைப் பற்றி கூறியுள்ளார். 


அந்த பேட்டியில் அவர், ரோபோ ஷங்கருக்கு உடலில் சில பிரச்சனைகள் ஏற்பட்டதும், உடல் எடை குறைந்ததும் உண்மைதான்.யாருக்கு வேண்டுமானாலும் உடல்நிலை சரியில்லாமல் போகலாம். அவரது உடல்நிலை குறித்து நிறைய காரணங்கள் கூறுகின்றனர், விரைவில் ரோபோ ஷங்கர் பூரண குணமடைந்து பழையபடி நல்ல நிலைக்கு திரும்பி வருவார் என கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement