• Sep 20 2024

கொலை மிரட்டலினால் அச்சத்தில் உறைந்துள்ள பிரபல நடிகை மற்றும் அவரது கணவர்…வைரலாகும் தகவல்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவுட் சினிமாவில் அதிகம் கொண்டாடப்படும் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருவபவர் நடிகை கத்ரீனா கைப். இவர் பிரிட்டிஷ் இந்திய நடிகை ஆவார். ஹிந்தி, தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் இவர் நடித்துள்ளார். இருப்பினும் இவர் அதிகம் முன்னணியில் நடிப்பது ஹிந்தி திரைப்படங்களிலேயே ஆகும். அதுமட்டுமன்றி இந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராகவும் திகழ்ந்து வருபவர் நடிகை கத்ரீனா கைப்.

இவர் 2003 இல் இலண்டனைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளர் கெய்ஸாத் கஸ்டாட் இயக்கிய 'பூம்' என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரை உலகில் கால் பதித்தார். இதன் பின்னர் ஹிந்தி திரையுலகின் பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து பல வெற்றி படங்களை கொடுத்தார்.

இவரது அழகினாலும் தனது தனித்துவமான நடிப்பினாலும் ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்தார். 2010-ஆம் ஆண்டில் பாலிவுட்டின் மிகச்சிறந்த ஆறு நடிகைகளில் கரீனா கபூர், பிரியங்கா சோப்ரா, ஐஸ்வர்யா ராய், தீபிகா படுகோன் மற்றும் கங்கனா ராணவத் ஆகியோருடன் பட்டியலிடப்பட்டார்.

இவ்வாறு சினிமாவில் தனது பயணத்தை தொடர்ந்த நடிகை கத்ரீனா கைப். 2021-ஆண்டு டிசம்பரில் விக்கி கௌஷால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின் பின்னர் கத்ரீனா கைப் கொலை மிரட்டலுக்கு ஆளானார். கொலை மிரட்டல் தொடர்பில் மன்வேந்திர சிங் என்பவர் கைது செய்யப்பட்டார். இதன் பின்னர் கத்ரீனா கைப்பைப் பின்தொடர்ந்து விக்கி கௌஷாலை மிரட்டியதாகக் கைது செய்யப்பட்டு ஒரு நாள் கழித்து மன்வேந்திர சிங் மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்த நிலையில் நடிகை கத்ரீனா கைப்பை தொடர்ந்து அவரது கணவர் நடிகர் விக்கி கௌஷாலை சமூக ஊடகங்களில் மிரட்டியதாகக் கூறப்படும் மன்வேந்திரா சிங் மும்பையில் உள்ள பாந்த்ரா நீதிமன்றத்தில் சமீபத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். மும்பை போலீஸார் நீதிமன்றத்திற்கு வெளியே 30 வயது மன்வேந்திராவுடன் புகைப்படம் எடுத்தனர். மேலும் விக்கி கௌஷால் சாண்டாகுரூஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்த சில மணி நேரங்களில் போலீஸார் மன்வேந்திராவைக் கைது செய்தனர்.

துணை போலீஸ் கமிஷனர் மஞ்சுநாத் சிங் தெரிவிக்கையில் "நாங்கள் அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்று கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்தினார். இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 506 (2) - கிரிமினல் மிரட்டல் மற்றும் 354 (டி) - பின்தொடர்தல் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 இன் பிரிவு 67 - ஆபாசமான விஷயங்களை கடத்துதல் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேலும் இது தொடர்பான செய்தியை தெரிவித்த சாண்டாக்ரூஸ் காவல்நிலைய அதிகாரி ஒருவர் "சில நாட்களாக துன்புறுத்தல் மற்றும் மிரட்டல் நடந்து வருவதாக நடிகர் கூறியதை அடுத்து அவர் காவல்துறையை அணுகி புகார் அளிக்க முடிவு செய்துள்ளார்" என்றார். இருப்பினும் இந்த கொலை மிரட்டல் தொடர்பான விஷயத்தை கத்ரீனாவும், விக்கியும் இதுவரை திறந்த அரங்கில் பகிரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கொலை மிரட்டலை பாலிவுட் பிரபலங்கள் எதிர்கொள்வது இது முதல் முறையல்ல. விக்கி மற்றும் கத்ரீனாவுக்கு முன்னதாக, நடிகை ஸ்வரா பாஸ்கர் கடிதம் மூலம் கொலை மிரட்டலை எதிர் கொண்டார். இக் கொலை மிரட்டல் கடிதம் அவரின் இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பப்பட்டது. கடிதத்தைப் பெற்ற ஸ்வாரா, வெர்சோவா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதேபோல் நடிகர் சல்மான் கான் மற்றும் அவரது தந்தை சலீம் கானும் ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு கொலை மிரட்டலை கடிதம் மூலம் எதிர் கொண்டனர். சல்மானின் தந்தை சலீம் மிரட்டல் கடிதத்தை தனது பாதுகாப்பு ஊழியர்கள் மூலம் பெற்றுக்கொண்டார். இவ்வாறாக இன்றைய காலகட்டத்தில் பாலிவுட் பிரபலங்கள் கொலை மிரட்டலினை அடிக்கடி எதிர்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement