• Sep 20 2024

'விடுதலை' படத்தின் உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனங்கள்.. அப்போ ரிலீஸ் தேதி confirm..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

வெற்றி  மாறன் இயக்கத்தில் மார்ச் 31இல் வெளியாகவுள்ள 'விடுதலை' என்ற திரைப்படம் உதயநிதி ஸ்டாலினின்  ரெட் ஜெயண்ட் மூவீஸ் மூலம்  வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தில் நடிகர் சூரி, விஜய் சேதுபதி ஆகியோர் லீட் கேரக்டரில் நடித்துள்ளனர். 


இந்த திரைப்படம் இரண்டு  பாகங்களை கொண்டுள்ளது. இதில் முதலாம் பாகம் மார்ச்சில் வெளியாகவுள்ள நிலையில் காதல் மெலோடியாக  உருவாகியுள்ள பர்ஸ்ட் சிங்கிள் என்ற தனுஷ் பாடிய பாடல் இரு தினங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களின் ரசனையில் முதலிடம் பிடித்துள்ளது. மேலும் இத்திரைப்படத்தில் கௌதம் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் ஜிவி பிரகாஷ்ஷின்  தங்கை பவானிஸ்ரீ உள்ளிட்டவர்களும் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். 


அவ்வாறு இருக்கும்போது வெற்றி மாறன் இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இணைந்து இசையமைத்த பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


இந்நிலையில் இந்த படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் விற்றுத் தீர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. டிஜிட்டல் உரிமையை ஜீ5 நிறுவனமும்  மற்றும் சாட்டிலைட் உரிமையை கலைஞர் டிவி நிறுவனமும் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தில் முதல் பாகம் சூரிக்கு இரண்டாம் பாகம் விஜய் சேதுபதிக்கு முக்கியத்துவம் கொடுத்து அமைந்துள்ளதாக இயக்குநர் வெற்றிமாறன் கூறியுள்ளார்.


Advertisement

Advertisement