• Sep 21 2024

கோப்ரா படத்தின் கேரளா ரிலீஸ் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்..

tech / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் விக்ரம். எந்த கதாபாத்திரத்தையும் ஏற்று நடிக்க கூடியவர். அந்த வகையில் டிமான்டி காலனி, இமைக்காநொடிகள் போன்ற வெற்றி படங்களை கொடுத்த இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோபுர திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக கே.ஜி.ஃப் நடிகை ஸ்ரீநிதி ரெட்டி நடிக்கிறார். இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்து வருகின்ற இப்படத்தில் விக்ரம் பல கெட்டப்புகளில் நடிப்பதாக இப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகமாக கிளம்பியுள்ளன.

கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் முடிவுற்றது. இதையடுத்து படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வெளியானது. ஆகஸ்ட் 16ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் தமிழக உரிமையை ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அதேபோல படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமையை யுனைடெட் இந்தியா நிறுவனம் கைப்பற்றியுள்ளது. முன்னதாக தொலைக்காட்சி உரிமை கலைஞர் தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

இதை அடுத்து இப்போது கேரளா ரிலீஸ் உரிமையை இபார் மீடியா-ராபி மாதிரா மற்றும் ட்ரீம் பிலிம்ஸ் நிறுவனங்கள் கைப்பற்றி உள்ளனர். இதுபற்றிய அதிகாரப்பூர்வ தற்போது வெளியாகியுள்ளது

Advertisement

Advertisement