• Sep 20 2024

விடுதலை படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவு- அறிவிப்பை வெளியிட்ட பிரபல நிறுவனம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி முதன்மைக் கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் தான் விடுதலை. இப்படத்தில் விஜய்சேதுபதி மற்றும் கௌதம் மேனன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.


ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற நாவலை அடிப்படையாக கொண்டு விடுதலை திரைப்படம் உருவாகியுள்ளது.இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் மூலம் தயாரிக்கப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டுள்ளனர்.


மேலும் மேலும் விரைவில் விடுதலை படம் திரைக்கு வருகிறது எனவும் கூறியுள்ளனர். இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இளையராஜா படத்திற்கு இசையமைக்கிறார். ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் நிறுவனம் விடுதலை படத்தை தயாரித்து வருகிறது.


இந்நிலையில் விடுதலை திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக ரெட் ஜெயண்ட் நிறுவனம் டுவிட்டர் பக்கத்தில்  அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement