• Sep 20 2024

வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் தமிழக உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள திரைப்படம் வெந்து தணிந்தது காடு.

சிம்புவிற்கு ஜோடியாக புதுமுக நடிகை சித்தி இதனிகா நடித்துள்ளார். மற்றும் சிம்புவின் தாயாராக நடித்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இத்திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை இந்த மாதம் நடத்த திட்டமிட்டு உள்ளனர்.

சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படம் வருகிற செப்டம்பர் 15ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இதனை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

பிற செய்திகள்

Advertisement

Advertisement