• Sep 20 2024

இந்தியன் 2 திரைப்படத்தின் மொத்த தயாரிப்பையும் கைப்பற்றிய பிரபல நிறுவனம்

stella / 2 years ago

Advertisement

Listen News!


இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தின் மூலம் உலக அளவில் பிரபல்யமான நடிகராக மாறி இருப்பர் தான் கமல்ஹாசன். இப்படம் இவரது கெரியரில் மறக்க முடியாத திருப்பத்தைத் தந்துள்ளது. இதனால் இவருடைய படங்களுக்கான எதிர்பார்ப்பானது ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

அந்த வகையில் தற்பொழுது நீண்ட நாட்களாக கிடப்பிலேயே கிடந்த இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பானது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. லைக்கா நிறுவனம் தயாரித்து வந்த நிலையில் இந்த படத்தை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது


ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் நிறுவனர் உதயநிதி ஸ்டாலினின் டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனை அடுத்து புதிய போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் அந்த போஸ்டரில் லைக்கா மற்றும் ரெட்ஜெயன்ட் ஆகிய இரண்டு நிறுவனங்களின் பெயர்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது .

இதனையடுத்து ‘இந்தியன் 2’  திரைப்படத்தின் மொத்த தயாரிப்பையும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பரில் மீண்டும் துவங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டது.

Advertisement

Advertisement