• Sep 20 2024

விடுதலை படத்தின் தமிழக உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்- அடடே சூப்பர் அப்டேட்டாக இருக்கே

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முக்கிய இயக்குநராக இருப்பவர் தான் வெற்றிமாறன்.இவர் தற்பொழுது நடிகர் சூரியை வைத்து விடுதலை என்னும் படத்தை இயக்கி வருகின்றார்.இப்படத்தில் விஜய்சேதுபதியும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

இப்படத்திற்கு இளையராஜா இசையமைப்பதோடு இயக்குநர் கௌதம் மேனன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.இப்படம்  எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் சிறுகதையை அடிப்படையாக வைத்து உருவாகி வருவதோடு ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ISC ஒளிப்பதிவு செய்கிறார்.


இந்தப்படத்தை RS Infotainment தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பானது சத்தியமங்கலம், திண்டுக்கல் சிறுமலை, பன்ருட்டி சுற்றுவட்டாரப்பகுதிகளில் படமாக்கப்பட்டது.

 வரும் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என்று தகவல் வெளியாகும் உள்ள நிலையில்  இந்த படத்தின் தமிழக தியேட்டர் ரிலீஸ் உரிமத்தை பிரபல நடிகர் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின், தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் கைப்பற்றி உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.


 

Advertisement

Advertisement