தனது காதலியான 49 வயது நடிகை கர்ப்பமாக இருப்பதாக வெளியான தகவலால் கொதித்து போய் புதிய பதிவை இட்டுள்ளார் பிரபல நடிகர் அர்ஜூன் கபூர்
பிரபல தயாரிப்பாளரான போனி கபூரின் முதல் மனைவிக்கு பிறந்தவர் தான் பாலிவுட் நடிகர் அர்ஜூன் கபூர். இந்தியில் முன்னணி இயக்குநர்கள் பலரது படங்களில் நடித்து வருகிறார். 37 வயதான அர்ஜூன் கபூர், 49 வயதான நடிகையும் மாடலுமான மலைக்கா அரோராவை காதலித்து வருகின்றார். இருவரும் அடிக்கடி வெளிநாடுகளில் டேட்டிங் செய்து வருகின்றனர். தங்களின் டேட்டிங் புகைப்படங்களை சமூக வலை தளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.
49 வயது நடிகையான மலைக்கா அரோரா ஏற்கனவே சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கானை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு அர்ஹான் கான் என்ற மகன் உள்ளார். திருமணம் ஆகி 19 ஆண்டுகள் ஆகிய நிலையில் அர்பாஸ் கானை விவாகரத்து செய்தார் மலைக்கா அரோரா.எனினும் இதனை தொடர்ந்து தன்னை விட 12 வயது சிறியவரான அர்ஜூன் கபூருடன் ரிலேஷன்ஷிப்பிலுள்ள மலைக்கா அரோரா, திருமணம் செய்து கொள்ளும் எண்ணமெல்லாம் இல்லை என்று கூறியிருந்தார்.
இதனால் இருவரும் பிரிந்துவிடுவார்கள் என கூறப்பட்டது. ஆனால் சமீபத்தில் நான் சம்மதம் சொல்லிவிட்டேன் என்று பதிவிட்டிருந்தார். எனினும் இதனை பார்த்த ரசிகர்கள் அர்ஜூன் கபூருடன் திருமணத்திற்கு எஸ் சொல்லி விட்டீர்களா என்று கேட்டு வந்தனர். இவ்வாறுஇருக்கையில் ஊடகம் ஒன்றில் மலைக்கா அரோரா கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியானது. மலைக்கா அரோராவும் அர்ஜூன் கபூரும் லண்டன் சென்ற போது தனக்கு நெருக்கமான நண்பரிடம் மலைக்கா தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை கூறியதாக செய்திகள் தீயாய் பரவின. ஆனால் இந்த செய்தியில் உண்மையில்லை என மலைக்காவின் குடும்ப நண்பர் மறுத்துள்ளார்
அத்தோடு நடிகர் அர்ஜூன் கபூரும் இந்த தகவலை மறுத்துள்ளார். அதோடு இந்த செய்தியை வெளியிட்ட ஊடகத்தையும் கடுமையாக விமர்சித்துள்ளார் அர்ஜூன் கபூர். நீங்கள் மிகவும் தரம் தாழ்ந்து போயிருக்கிறீர்கள். ஒரு குப்பைச் செய்தியை ரொம்ப சர்வ சாதாரணமாக வெளியிட்டுள்ளீர்கள். இதுபோன்ற செய்தியை அடிக்கடி எழுதி வருகிறீர்கள். எனினும் இதுபோன்ற பொய் செய்திகளையும் கிசுகிசுக்களையும் எழுதி உண்மையாக்க பார்க்கிறீர்கள். எங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் விளையாடாதீர்கள் என கண்டித்துள்ளார்.
மற்றொரு பதிவில் கர்மா எல்லோருக்கும் அதன் பலனை கொடுக்கும்.அத்தோடு நீங்களும் அதனை அனுபவிப்பீர்கள் என மற்றொரு பதிவையும் வெளியிட்டு விளாசியுள்ளார் அர்ஜூன் கபூர். அர்ஜூன் கபூரின் காட்டமான பதிவுகளை தொடர்ந்து சம்பந்தப்பட்ட செய்தி நிறுவனம் மலைக்கா அரோரா கர்ப்பம் குறித்த செய்தியை நீக்கி விட்டது.எனினும் இதுபோன்ற பொய்யான செய்திளை வெளியிடும் நிறுவனங்கள் அதனை நிறுத்திக்கொள்ள வேண்டுமென பாலிவுட் பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Listen News!