• Sep 20 2024

விஜய்யை வைத்து படம் இயக்கப்போகும் பிரபல ஆர்.ஜே-கிறீன் சிக்கல் கிடைச்சாச்சு..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தொகுப்பாளராக அறிமுகமாகி தீயா வேலை செய்யனும் குமாரு, வடகறி போன்ற திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி.

இது தவிர தனக்கேற்ற கதைகளை தேர்வு செய்து நாயகனாகவும் நடித்து வருகின்றார்.

அந்த வகையில் அவர் நடித்த ‘எல்.கே.ஜி’, ‘மூக்குத்தி அம்மன்’ ஆகிய படங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன. இதையடுத்து வீட்ல விசேஷங்க” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்துள்ளார்.அந்த பெடம் வெளியாகி ரசிகர்களிடத்தே நல்ல வரவேற்ப்பு பெற்று வருகின்றது.

இதனிடையே அப்படத்தின் சக்சஸ் மீட் இன்று நடந்துள்ளது, அதில் RJ பாலாஜி சுவாரஸ்யமான தகவலை தெரிவித்துள்ளார். ஆம், கடந்த் ஜனவரி 27 ஆம் தேதி பாலாஜி நடிகர் விஜய்யை சந்தித்து அவரிடம் கதையை சொல்லியுள்ளாராம்.

2 மாதத்தில் அந்த கதையை எழுதி, ஒரு 40 நிமிட கதையை அவரிடம் கூறினராம் பாலாஜி. அந்த லைன் கேட்டு விஜய்க்கு பிடித்தி போனாதாகவும், “காமெடியாக மூக்குத்தி அம்மன் திரைப்படம் போல உங்க ஸ்டைலில் ஒரு கதையை எதிர்பார்த்தேன். ஆனால் இது ரொம்ப பெருசு-ஆ இருக்கே.

மேலும் இந்த கதையை உருவாக்க இன்னும் எவ்வளவு டைம் ஆகும்” என விஜய் கேட்டுள்ளாராம். அதற்கு பாலாஜி இன்னும் ஒரு வருடமாவது ஆகும் என்றதாகவும், உங்களுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் பிடித்த படமாக உருவாக்க இந்த ஒரு வருட காலம் கண்டிப்பாக தேவை என அவர் கூறினாராம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement