தமிழ் சினிமாவில் பிரபல வில்லன் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் RK சுரேஷ். இவர் தனது வில்லத்தனம் நிறைந்த சிறந்த நடிப்பினால் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களைக் கொள்ளை கொண்டிருக்கின்றார். அந்தவகையில் பாலாவின் தாரை தப்பட்டை படம் தான் இவரை பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் பாப்புலர் ஆக்கியது.
பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவரான RK சுரேஷ் தற்போது வில்லனாக நடிப்பது மட்டுமின்றி ஹீரோவாகவும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் தற்போது தனக்கு ஆண் குழந்தை பிறந்து இருப்பதாக தெரிவித்து இருக்கிறார். அதை பற்றி அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
ஆனால் குழந்தைக்கு ஒரு பிரச்சினை இருக்கின்றது. இதனையும் அவர் இப்பதிவில் குறிப்பிட்டுள்ளார். அதாவது குழந்தைக்கு மூச்சு விடுவதில் பிரச்சனை இருக்கிறது என தெரிவித்து இருக்கும் ஆர்கே சுரேஷ், அனைவரும் வேண்டிக்கொள்ளுங்கள் என கேட்டுக்கொண்டிருக்கிறார். மேலும் இதற்கு முன்னர் ஏற்கனவே ஆர்கே சுரேஷுக்கு ஒரு பெண் குழந்தை இருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
We are blessed with the boy baby . Unfortunately he had a breathing difficulties now by the grace of god he is fine . Pls keep us in your prayers 🙏 #omnamahshivay pic.twitter.com/15NKDTvcYF
Listen News!