• Nov 19 2024

படத்தை விமர்சித்த ரசிகர்... விரக்தியின் உச்சத்தில் வெகுண்டெழுந்த அல்போன்ஸ் புத்திரன்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

மலையாளத்தில் வித்தியாசமான ஜானர்களில் படங்களை இயக்கும் இளம் இயக்குநர்களில் ஒருவர் அல்போன்ஸ் புத்திரன். 2013ல் நேரம் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான அல்போன்ஸ், முதல் படத்திலேயே தனது தனித்துவமான மேஜிக் என்னவென்பதை காட்டினார்.அத்தோடு  நிவின் பாலி, நஸ்ரியா நஸிம், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து அல்போன்ஸ் இயக்கத்தில் ரிலீஸான பிரேமம் சூப்பர் டூப்பர் திரைப்படமாக கொண்டாடப்பட்டது.


பிரேமம் வெளியாகி 8 ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் கோல்ட் திரைப்படத்தை இயக்கினார். பிருத்விராஜ், நயன்தாரா நடிப்பில் உருவான இந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. இந்தப் படத்தின் திரைக்கதையும் எதிர்பார்க்காத வகையில் புதுமையாக இருக்கும் என ரசிகர்கள் காத்திருந்தனர். இவ்வாறுஇருக்கையில், கடந்த மாதம் வெளியான கோல்ட் எதிர்பார்த்ததை விட மிக மோசமான தோல்வியை தழுவியது. ரசிகர்களின் நெகட்டிவான விமர்சனங்கள் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரனை மேலும் டென்ஷன் ஆக்கியது.

இவ்வாறுஇருக்கையில், ரசிகர் ஒருவர் கோல்ட் படத்தை விமர்சித்து தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். அதில் நல்லா இல்லாத படத்தை நல்லா இல்லைன்னு தான் சொல்ல முடியும். ஹோட்டலுக்கு போகும் போது அங்க சாப்பாடு நல்லா இல்லைன்னா நல்ல இல்லன்னு தானே சொல்றோம் என கூறியுள்ளார். எனினும் அதற்கு ரொம்பவே கோபமாக பதிலளித்துள்ள அல்போன்ஸ் புத்திரன், உன் முகம் நல்லா இல்லைன்னு சொல்ல எனக்கு ரைட்ஸ் இல்லைல, உன் முகம் புடிக்கலைன்னு தான் சொல்லணும். அதனால படம் புடிக்கலைன்னு சொல்லு எனக் கூறியுள்ளார். இதனால் கடுப்பான அந்த ரசிகர் தரக்குறைவான வார்த்தைகளால் அல்போன்ஸ் புத்திரனை வசைபாடியுள்ளார்.

இதனையடுத்து தனது முகநூல் பக்கத்தில் விரிவான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் அல்போன்ஸ் புத்திரன். அதில், "உங்களுடைய மன நிம்மதிக்காக என்னையும் எனது கோல்ட் படத்தை பற்றியும் தவறாக பேசுவது உங்களுக்கு நல்லதாக இருக்கலாம். ஆனால், எனக்கு அது நல்லதல்ல. அதனால் என் முகத்தை இணையத்தில் காட்டாமல் போராட்டம் நடத்துகிறேன். நான் உங்கள் அடிமை இல்லை. நீங்கள் என்னை கிண்டல் செய்யவோ அல்லது பொது இடங்களில் துஷ்பிரயோகம் செய்யவோ உங்களுக்கு உரிமை கிடையாது. அத்தோடு உங்களுக்கு பிடித்தால் எனது படங்களை பாருங்கள், கோபங்களை வெளிப்படுத்துவதற்காக என்னுடைய சோசியல் மீடியா பக்கத்திற்கு வராதீர்கள்" என காட்டமாக பதிவிட்டுள்ளார்.


அத்தோடு , "நீங்கள் இதை தொடர்ந்து செய்தால் நான் இணையத்தில் கண்ணுக்கு தெரியாதவனாக மாறிவிடுவேன். நான் முன்பு போல் இல்லை. முதலில் எனக்கு உண்மையாக இருப்பேன், பின்னர் எனது மனைவி, குழந்தைகள் என்னை மிகவும் விரும்பும்புபவர்கள், நான் கீழே விழும்போது என் அருகில் நின்றவர்களுக்கு உண்மையாக இருப்பேன். நான் கீழே விழுந்தபோது உங்கள் முகத்தில் தெரிந்த சிரிப்பை என்னால் மறக்க முடியாது. யாரும் வேண்டுமென்றே விழுவதில்லை. 


மேலும் இது இயற்கையாக நடக்கும். எனவே அதே இயற்கையே என்னைத் துணையாகக் காக்கும். இந்த நாள் இனிதாகட்டும்" என தன் மனதில் இருந்ததை கொட்டித் தீர்த்துள்ளார் அல்போன்ஸ் புத்திரன். இந்த பதிவு இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. அத்தோடு சில தினங்களுக்கு முன்னர் அஜித்தை பார்ப்பதற்காக 8 ஆண்டுகள் காத்திருந்து டயர்டு ஆகிவிட்டதாக அல்போன்ஸ் புத்திரன் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement