பாலிவுட், டோலிவுட், கோலிவுட் என 3 மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழில் தற்போது 6வது சீசன் ஒளிபரப்பாகிறது, 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, சாந்தி, அசல், ஷெரினா என சிலர் மட்டும் வெளியேறிய நிலையில் விறுவிறுப்புடன் செல்கின்றது.
இந்த வாரம் யார் வெளியேறப்போகிறார் என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும்.பிக்பாஸ் வீட்டுக்குள் ஃபேக்டரி டாஸ்க் நடக்கிறது. மேலும் இதில் இருவகை அணிகளாக பிரிந்து பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் கடைகளை வைத்திருக்கின்றனர். இந்த இனிப்பு பொருட்களுக்கான அட்டைகளை வீட்டுக்குள் அனுப்பும்போது போட்டியாளர்கள் முந்தியடித்துக்கொண்டு என்று கலெக்ட் செய்துகொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்றைய நாளுக்கான முதல் மூன்றாவது ப்ரமோ வெளியாகி உள்ளது.
அதில் இன்று அமுதவாணனுக்கும் விக்ரமனுக்கும் இடையில் சண்டை வெடிக்கின்றது.அதாவது இவர் கேம் என்ற பெயரில் என்னை பெர்சனல் ஆக டார்க்கெட் பண்ணுகிறார் என விக்ரமன் கத்துகின்றார்.வாயை மூடுங்க என விக்ரமன் கத்த நீங்க அப்பிடி பேசாதீங்க எனக் கூற இரண்டு பேரும் முட்டி மோதுகின்றனர்.இதோ அந்த ப்ரமோ..
Listen News!