• Sep 21 2024

''பீஸ்ட் படம் சரியில்ல.. இயக்குநரை மாற்ற சொன்னாங்க''...சூப்பர் ஸ்டார் கூறிய ஷாக்கிங் தகவல்..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின்  சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ஜெயிலர் படத்தின் இசை வெளியிட்டு விழா நடைபெற்றது. இதில் மேடையில் பேசிய ரசிகர்கள் பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.


குறிப்பாக நெல்சன் திலிப்குமாருக்கு ஜெயிலர் படம் வாய்ப்பு கிடைத்தது குறித்து அவர் பேசியது பலரையும் வியப்பில் ஆழ்த்தியத்திது.

நெல்சன் - ஜெயிலர் குறித்து அவர் பேசுகையில் "ஜெயிலர் படத்தின் கதையை கேட்டவுடன் அனைத்தையும் ஓகே செய்துவிட்டேன், அதன்பின் நான், அனிருத், நெல்சன் மூவரும் இணைந்து அறிவிப்பு வீடியோ ஒன்றை தயார் செய்து ஜெயிலர் படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தோம். அதை அனைவரும் பார்த்து இருப்பீர்கள்.

ஜெயிலர் அறிவிப்புக்கு பிறகு பீஸ்ட் வெளிவந்தது. ஆனால், பீஸ்ட் படம் விமர்சன ரீதியாக நல்லா இல்லை. இதனால் எனக்கு நெருங்கிய நண்பர்கள், சினிமா துறையை சேர்ந்த சிலர், பீஸ்ட் விமர்சனம் சரியில்ல இயக்குநர் மாத்துங்க என்று கூறினார்கள். எப்போதுமே ஒரு நல்ல இயக்குநர் தோற்றுப்போவதில்லை. அந்த கதை தான் தோற்றுப்போகிறது. அந்த கதைக்கான கதாபாத்திரங்கள் தேர்வு சரியில்லை என்றால் தான் அந்த கதை தோற்றுப்போகும். ஆனால், என்றைக்குமே ஒரு இயக்குநர் தோற்றுப்போவதேயில்லை.

இப்போ ஜெயிலர் படம் நெல்சன் கூட பண்ண போறோம்னு அறிவிச்சாச்சு, இப்போ நான் இந்த படம் பண்ணவில்லை என்று சொன்னால் நெல்சன் எதிர்காலம் என்ன ஆவது. ஆனால், இந்த முடிவு எடுக்க வேண்டியது நான் இல்லை, தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தான். அவருடைய அலுவலகத்தில் பணியாற்றும் முக்கிய நபர்கள் என்னை சந்திக்க வந்தனர்.

அப்போது பீஸ்ட் படம் எந்த ஒரு விநியோகஸ்தர்களுக்கும் நஷ்டத்தை கொடுக்கவில்லை, தயாரிப்பாளருக்கும் மாபெரும் லாபத்தை கொடுத்துள்ளது. படம் செம வசூல். இதனால் கண்டிப்பாக நெல்சனுடன் படம் பண்ணலாம்" என கலாநிதி மாறன் சொல்லி அனுப்பியதாக அவர் கூறினார்கள் என ரஜினிகாந்த் மேடையில் இந்த சுவாரஸ்ய தகவலை பகிர்ந்திருந்தார்.. 

Advertisement

Advertisement