• Sep 21 2024

திரையரங்கில் கேக் வெட்டி கொண்டாடிய சூரரைப் போற்று படக்குழு- இணையத்தில் லீக்கான புகைப்படங்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

ஒட்டுமொத்த இந்திய திரையுலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த திரைப்படம் தான் சூரரைப் போற்று. இப்படத்தை இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியிருந்ததோடு கதாநாயகனாக சூர்யா நடித்திருந்தார்.

இப்படம் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020ம் ஆண்டு தீபாவளி ரிலீஸாக நவம்பர் 12ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியது. இப்படம் ஓடிடியில் வெளியாகி பெரும் பிரச்சனையை சந்தித்தது. ஆனால், படத்தை பார்த்த பலரும் இந்த படம் ஓடிடியில் வெளியாகாமல் தியேட்டரில் வெளியாகி இருந்தால் அப்பவே மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தியிருக்கும் எனக் கூறினார்கள்.


இந்த படத்துக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என பலரும் எதிர்பார்த்ததை போலவே தற்போது 5 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த நடிகர் சூர்யா, சிறந்த நடிகை அபர்ணா பாலமுரளி, சிறந்த இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், சிறந்த திரைக்கதை சுதா கொங்கரா, சிறந்த திரைப்படம் என 5 விருதுகளை தட்டித் தூக்கியது.

இந்நிலையில், தேசிய விருதுகளை அள்ளிக் குவித்துள்ள நிலையில், இன்றும் ஒரு பிரபல தியேட்டரில் சூரரைப் போற்று திரையிடப்பட்டது.அந்த ஸ்பெஷல் ஸ்க்ரீனிங்கில் இயக்குநர் சுதா கொங்கரா மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் பங்கேற்றனர். பின்னர், விருது பெற்றதை முன்னிட்டு கேக் கட்டிங் செய்யப்பட்டது.

அதன் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி டிரெண்டாகி வருகின்றன. நடிகர் சூர்யாவுக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன், மோகன்லால், மம்மூட்டி, கீர்த்தி சுரேஷ், விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் வாழ்த்து கூறினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

ஆனா சும்மா இருக்குறது எப்படின்னு நீ கத்துக்கிட்ட- சிவாஜி குறித்து பேசி நெகிழ்ந்த ரஜினி

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement