• Sep 20 2024

மாமன்னன் திரைப்பட வெற்றியை கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு- யாரெல்லாம் நிற்கிறாங்க என்று பாருங்க

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில்,ஜூன் 29ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் மாமன்னன்.உதயநிதி ஸ்டாலினை ஹீரோவாக வைத்து ஹீரோவாக வெளியான இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களையும் பெற்றது.


வழக்கம்போல் தன்னுடைய கதைகளில் கூறப்படும், இரு சாதியினருக்கு இடையே காட்டப்படும் வேறுபாட்டை மீண்டும் 'மாமன்னன்' படத்தில், மாரி எடுத்துக்காட்டி இருந்தாலும் அரசியல் கண்ணோட்டத்தில் இந்த படத்தை நகர்த்தி சென்றது திரைக்கதைக்கு, வலு சேர்த்தது என கூறலாம்.  


இப்படத்தை ரெட் ஜெயின் மூவிஸ் நிறுவனம், மிகப் பிரம்மாண்டமாக தயாரித்திருந்த நிலையில், இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார்.  இப்படம், இரண்டு நாட்களில் சுமார் 17 கோடி வசூல் செய்துள்ள நிலையில், இன்றும் - நாளையும் விடுமுறை நாட்கள் என்பதால் மேலும் வசூல் சிறப்பாக இருக்கும் என திரையரங்கு உரிமையாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


இந்த நிலையில் இப்படத்தின் வெற்றியை, இயக்குநர் மாரி செல்வராஜ், உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் ஏ ஆர் ரகுமானை சந்தித்து அவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து கூறி, கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement