தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமாகியிருந்தாலும் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்திருக்கும் முக்கிய நடிகர் தான் கார்த்தி. இவரது நடிப்பில் விருமன், பொன்னியின் செல்வன் ,சர்தார் போன்ற திரைப்படங்கள் உருவாகி வருகின்றது.
இதில் விருமன் படத்தை இயக்குநர் முத்தையா இயக்கியுள்ளதோடு கதாநாயகியாக இயக்குநர் சங்கரின் மகள் அதிதி நடித்து இருக்கின்றார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதற்கு முதல் முத்தையா குட்டிப்புலி, கொம்பன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் இந்த படம் வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை விடுமுறையை முன்னிட்டு வெளியாகும் என 2டி நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!