தளபதி விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகி இருக்கும் வாரிசு திரைப்படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் ஜனவரி 11ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் மிகப்பிரமாண்டமாக நடைபெற்று இணையதளத்தை தெறிக்க விட்டது.
அதன் பிறகு ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து இருந்த வாரிசு படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது.அதிலும் வாரிசு குடும்ப படம் என்பதால் கண்டிப்பாக ரசிகர்களுக்கு செம விருந்தாக இருக்கும் என்று நினைத்தார்கள்.
மேலும், விஜய் தன் தெலுங்கு மார்க்கெட்டை பெரிதாக்க வம்சி, தில் ராஜுவுடன் கூட்டணி அமைத்தார் என்றும் கூறப்படுகின்றது.ஆனால், வாரிசு தெலுங்கு வெர்ஷன் ஜனவரி 11 ரிலிஸாகவில்லையாம். இது ரசிகர்களுக்கு மிகப்பெரும் மன உளைச்சலை தந்துள்ளது.
இதனால் தமிழிலும் ரிலீஸ் திகதியில் மாற்றம் வருமா என ரசிகர்கள் மிகவும் குழம்பிப் போயுள்ளனர். மேலும் இப்படத்திற்கு தமன் இயைமைத்துள்ளார். இப்படத்திலிலுந்து வெளியாகிய அனைத்து பாடல்களும் ரசிகர்களின் கவனத்தை பெற்றிக்கின்றது என்பதும் முக்கியமாகும்.
Listen News!