• Sep 20 2024

படம் வெளியாவதற்கு முன்னரே திடீரென மரணமடைந்த வாரிசுபட முக்கிய பிரபலம்- கடும் அதிர்ச்சியில் படக்குழு

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகி இருக்கும் வாரிசு திரைப்படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் ஜனவரி 11ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. 

பல உச்ச நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது. ரூ. 60 கோடி பட்ஜெட்டில் ஆரம்பிக்கப்பட்ட இப்படம் முடிவில் ரூ. 80 கோடி வரை எட்டியுள்ளது.ஹைதராபாத்தில் பாதி படம் எடுக்கப்பட்டுள்ளது, 


இதில் நாயகியாக ராஷ்மிகா நடிக்க சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷ்யாம், சம்யுக்தா என பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.இந்த நேரத்தில் தான் ஒரு அதிர்ச்சியான செய்தி வந்துள்ளது, அதாவது இப்படத்தில் Production Designer சுனில் பாபு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.


50 வயதாகும் இவர் தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிப் படங்களிலும் பணியாற்றி இருக்கிறாராம். இதனால் இவரது மறைவிற்கு பிரபல்ஙகள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement