தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத மாஸ் நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகிய பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் அள்ளிக் குவித்தது.
அந்த வகையில் இவர் தற்பொழுது இயக்குநர் வம்சி இயக்கத்தில் தனது 66 வது படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தினை தில் ராஜு தயாரிப்பதோடு விஜய்க்கு ஜோடியாக முதல் முறையாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.
மேலும், தமன் இசையமைக்கும் இப்படத்தில் சரத்குமார், ஷாம் என பல திரையுலக நட்சத்திரங்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைத்ராபாத்தில் ஆரம்பித்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தளபதி 66 திரைப்படம் வருகிற 2023ஆம் ஆண்டு பொங்கல் அன்று வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
மேலும், இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரபல நடிகர் பிரபு நடிக்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர். இந்த செய்தியை அறிந்த விஜய்யின் ரசிகர்கள் தற்போது ட்விட்டரில் இதனை கொண்டாடி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!