தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குநரான ஷங்கரின் உதவி இயக்குநராக இருந்து ராஜா ராணி என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியவர் தான் அட்லி. இப்படம் பலராலும் வரவேற்கப்பட்டதோடு சூப்பர் ஹிட் வெற்றியும் பெற்றது.
இதனைத் தொடர்ந்து தளபதி விஜய்யை வைத்து தெறி மெர்சல் பிகில் போன்ற திரைப்படங்களை இயக்கியிருந்தார். இந்த மூன்று திரைப்படங்களும் ப்ளாக் பஸ்டர் வெற்றியடைந்தது.
மேலும் சமீபத்தில் கூட இயக்குநர் அட்லி பிகில் ராயப்பன் கதாபாத்திரத்தை வைத்து ஒரு முழுநீள திரைப்படம் வேண்டும் என பதிவிற்கு "பண்ணிட்டா போச்சு" என பதிலளித்து இருந்தார்.
இதற்கிடையே அட்லி தற்போது ஷாருக் கான் படத்தை இயக்கி வருவது, அனைவரும் அறிந்த விஷயம். இப்படம் பல்வேறு காரணமாக தள்ளிக்கொண்டே இருக்கிறது.
இந்நிலையில் தற்போது அப்படத்தின் டைட்டில் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது அப்படத்தின் டைட்டில் ஜவான் என தகவல் வெளியாகியிருக்கிறது. நயன்தாரா ஜோடியாக நடிக்கும் இப்படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.
பிற செய்திகள்:
- தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ள நடிகை சமந்தா-இது என்ன புது டுவிஸ்டாக இருக்கு
- இது ஒன்னு அப்பப்போ..பப்ளிசிட்டி பண்ணிக்கிட்டு இருக்கு-ஐஸ்வர்யா ரஜினிகாந்தை கலாய்த்த ரசிகர்கள்
- ’10 வருடங்களாக காதலித்தாலும் திருமணம் செய்யாமல் இருப்பதற்கு இது தான் காரணம்’- நடிகை ப்ரியா பவானி ஷங்கர்
- நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு அழைக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் தெரியுமா?
- மறைந்த பிரபல பாடகர் கே.கே-இன் இறுதி சடங்கு வெர்சோவா தகன மையத்தில் நிறைவேற்றம்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!