• Sep 20 2024

விடாமுயற்சி படத்திலிருந்து த்ரிஷாவை நீக்கிய படக்குழு- ட்ரெண்டிங் நடிகைக்கு அடித்த லக்

stella / 1 year ago

Advertisement

Listen News!

வலிமை படத்தை தொடர்ந்து அஜித் 'விடாமுயற்சி' என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தை தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ்த்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது. விடாமுயற்சி' திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்த வாரம் இறுதியில் புனேவில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிக்க த்ரிஷா கமிட்டாகியிருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தற்பொழுது புதிய தகவல் வைரலாகி வருகின்றது. அதாவது விடாமுயற்சி படத்தில் கதாநாயகியாக நடிக்க தமன்னா கமிட்டாகியுள்ளதாக கூறப்படுகின்றது.


 தமன்னா தான் ட்ரெண்டிங்கான நடிகையாக மாறி இருக்கிறார். லஸ்ட் ஸ்டோரிஸ், ஜெயிலர், காவாலா பாடல் என தமன்னா மீண்டும் அதிகம் ட்ரெண்ட் ஆகி வருகிறார். இந்த நிலையில் தான் அவருக்கு அஜித் பட வாய்ப்பு கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisement

Advertisement