• Sep 21 2024

அமெரிக்காவிலும் ஆண்டவர் தரிசனம் முடியலையா… வசூல் மழையில் நீந்தும் படக்குழுவினர்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

கமல் நடிப்பில் 4ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான திரைப்படம் விக்ரம். இளம் இயக்குநரான லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

விஜய் சேதுபதி, பஹத் பாசில், காளிதாஸ் ஜெயராம் போன்ற முன்னணி நடிகர்களும் மற்றும் கௌரவ தோற்றத்தில் நடிகர் சூர்யாவும் நடித்திருந்தனர்.

படம் வெளியாகி 13 நாட்கள் ஆன நிலையில் உலகளவில் ரூ.325 கோடி வரை வசூலித்து உள்ளது.

அந்த வகையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பயங்கரமாக வசூல் வேட்டை நடத்தி வருகின்றது.

இந்நிலையில், திரைப்படம் வெளியாகி மூன்று வாரங்கள் கடந்த நிலையில் அமெரிக்காவில் 2.6 மில்லியன் டாலர்கள் இந்திய மதிப்பில் சுமார் 21 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் 3-வது வாரத்தில் 60 திரைகளில் தொடர்ந்து ஓடிக்கொண்டு இருப்பதாகவும் விரைவில் 3 மில்லியன் டாலர்கள் வசூலிக்கும் எனவும் எதிப்பார்க்கப்படுகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement