தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் இயக்குநர்களில் ஒருவரான இயக்குநரான அருண் காமராஜ் இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடந்த மே மாதம் 20ம் திகதி வெளியாகிய திரைப்படம் தான் நெஞ்சுக்கு நீதி. இப்படத்தினை போனிகபூர் தயாரித்திருந்தார்.
பாலிவூட் சினிமாவில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ஆர்ட்டிகிள் 15 என்ற படத்தின் ரீமேக் தான் இது. இப்படத்தில் உதயநிதியுடன் ஆரி, தன்யா ராஜேந்திரன், மயில்சாமி, சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடித்திருந்தனர்.
கலைஞரின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தின் தலைப்பான ‘நெஞ்சுக்கு நீதி’ யை படத்துக்கு வைத்துள்ளது கூடுதல் கவனத்தைப் பெற்றது. ரிலீஸூக்குப் பின்னர் ரசிகர்கள் மற்றும் திரையுலகினரின் பாராட்டுகளையும் இப்படம் அள்ளிக் குவித்தது.
இந்நிலையில் இப்போது திரையரங்குகளில் வெளியாகி ஒரு மாதம் கழித்து இந்த திரைப்படம் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது. பிரபல ஓடிடி தளமான சோனி லைவில் வரும் ஜூன் 23 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் ஆக உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- சிவகார்த்திகேயனுடன் மோத நினைக்கும் ப்ளூ சட்டை மாறன் – கண்டபாட்டுக்குத் திட்டி வரும் ரசிகர்கள்
- ஈஷா சத்குருவின் Save Soil நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை சமந்தா
- ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிப்போன பிக்பாஸ் ரம்யா பாண்டியன்- அதிர்ச்சியில் ரசிகர்கள்
- ‘ஸ்ரீ நிதி சொல்வதை யாரும் நம்பாதீங்க’- நடிகை நட்சத்திராவில் காதலனான விஸ்வாவின் பரபரப்பான பேட்டி
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!