• Sep 20 2024

லத்தி படத்தின் ரிலீஸ் திகதியை உத்தியோகபூர்வமாக அறிவித்த படக்குழு-செம குஷியான ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உள்ள உச்ச நடிகர்களில் முக்கியமானவர் தான் நடிகர் விஷால். இவர் நடிப்பில் சமீபகாலமாக வெளியாகும் திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகின்றது. இருப்பினும் இவருடைய படங்களுக்கான எதிர்பார்ப்பானது அதிகரித்துக் காணப்படுகின்றது.

அந்த வகையில் இவரது நடிப்பில் தற்பொழுது “லத்தி” என்னும் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சற்று முன் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

அந்த வகையில் இந்த திரைப்படம் ஆகஸ்ட் 12-ஆம் தேதி சுதந்திர தின விடுமுறை தினத்தில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே ஆகஸ்ட் 11-ஆம் தேதி விக்ரம் நடித்த ’கோப்ரா’ படம் ரிலீஸாக உள்ள நிலையில் விக்ரம் படத்துடன் மோத விஷால் முடிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இப்படத்தில் விஷால் ஜோடியாக சுனைனா நடித்துள்ளார். இப்படத்தை நடிகர்கள் ராணா மற்றும் நந்தா தயாரித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement