• Sep 20 2024

காவாலயா பாடலுக்கு வெறித்தனமான டான்ஸ் ஆடிய முதியவர்- தியேட்டரில் நடந்த சம்பவம்- வைரலாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!


நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 10ம் தேதி வெளியான திரைப்படம் தான் ஜெயிலர். இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சுனில், சிவராஜ்குமார், தமன்னா, யோகி பாபு, ஜாக்கி ஷெரோஃப் என இந்திய திரையுலக பட்டாளமே நடித்திருந்தனர்.

பீஸ்ட் படத் தோல்வியை ஈடு செய்யும் விதமாக ஜெயிலர் படத்தின் மூலம் சூப்பர் கம்பேக் கொடுத்துள்ளார் நெல்சன். இப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் பாசிடிவ் விமர்சனங்களைக் கொடுத்து வருகின்றனர். இப்படம் வெளியாகி மூன்று நாட்களில் ஒட்டுமொத்தமாக 200 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.


ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற காவாலா பாடலுக்கு திரையரங்கில் நல்ல வரவேற்பு இருந்தது.இந்நிலையில், முதியவர் ஒருவர் திரையரங்கில் காவாலா பாடலுக்கு நடனமாடும் வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகிறார்கள்.

மேலும் இப்பாடலுக்கு ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை ரீல்ஸ செய்து வெளியிட்டிருந்தனர் என்பதும் முக்கியமாகும். படத்தின் வெற்றியால் ரஜினிகாந்த் செம குஷியில் இருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement