• Nov 14 2024

பிரபல நடிகை கவலைக்கிடம்... அதுவும் இப்படி ஒரு காரணத்தினாலா... சோகத்தில் மூழ்கிய திரையுலகம்...!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல வங்காள நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ஐந்த்ரிலா. இவர் கதாநாயகியாக பல மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். ஐந்த்ரிலாவுக்கு ஏற்கனவே உடலில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு இரண்டு முறை சிகிச்சை பெற்று குணம் அடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 


சமீப காலமாக ஆரோக்கியமாகவும், சந்தோசமாகவும் இருந்து வந்த இவர் தற்போது மீண்டும் உடல்நல குறைவு ஏற்பட்டு உயிருக்கு போராடி வருகிறார். அதாவது கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐந்த்ரிலாவுக்கு பக்கவாத நோய் ஏற்பட்டது. இதனால் குடும்பத்தினர் அவரை ஹவுராவில் உள்ள ஆஸ்பத்திரியில் உடனே அனுமதித்தனர். அங்கு மருத்துவர்களால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 


ஆனாலும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாகவே இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன. இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில் ஐந்த்ரிலா மூளையில் பல கட்டிகள் இருப்பதாகவும், இது அவரது உடல்நிலையை மேலும் மோசமடையச் செய்துள்ளதாகவும் டாக்டர்கள் கூறியிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து ஐந்த்ரிலா தற்போது கோமா நிலையில் இருக்கிறார். அவருக்கு செயற்கை சுவாச கருவிகள் பொருத்தி அதன் மூலமாகவே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஐந்த்ரிலா உடல்நிலை குறித்த தகவல் ஆனது அவரது ரசிகர்களுக்கு பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதோடு திரையுலகமே சோகத்தில் மூழ்கியுள்ளது. மேலும் அவர் விரைவில் குணம் அடைய வேண்டும் எனக் கூறிப் பலரும் பிரார்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement