• Nov 14 2024

அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் சிக்கிய பிரபலம்... அதுவும் எத்தனை கோடி மதிப்புள்ள சொத்துக்கள் தெரியுமா..? அதிர்ச்சியில் திரையுலகம்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ்த் திரையுலகில் 'வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்' தயாரிப்பு நிறுவனம் சார்பாக பல வெற்றித் திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வருபவர் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ். இவரின் தயாரிப்பில் காலத்திற்கு காலம் வரிசையாக ஏகப்பட்ட படங்கள் வெளியாகி வருகின்றன. 


அந்தவகையில் கெளதம் மேனனின் கடன்களை அடைக்க சம்மதித்து சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' என்ற படத்தை இயக்கும் வாய்ப்பை ஐசரி கணேஷ் கொடுத்திருந்தார்.


இப்படமானது செப்டம்பர் 15-ஆம் திகதி பிரமாண்டமாக வெளியாக உள்ள நிலையில் அதன் தயாரிப்பாளர்  ஐசரி கணேஷ் மோசடி வழக்கில் சிக்கி உள்ளார்.

அதாவது தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் ரூ.8.94 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கிஇருக்கின்றது. சமீபத்தில் அந்நியச் செலாவாணி மோசடி வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதில் ஜி.வி.ஃபிலிம்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான தஞ்சாவூரில் உள்ள ரூ.8.94 கோடி மதிப்புள்ள நிலத்தை முடக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் ஐசரி கணேஷிற்கு சொந்தமான பல கோடி ரூபாய் சொத்துக்கள் அமலாக்கத்துறையினரால் முடக்கப்பட்டுள்ளமை திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement