பிரபல மலையாள நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் கொச்சு பிரேமன். தன்னுடைய ஆரம்ப காலத்தில் நாடகங்களில் நடித்து வந்த இவர் பின்பு 1979-இல் மலையாள படங்களில் நடிக்க தொடங்கினார். அதிலும் குறிப்பாக அதிகளவான படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து இருக்கிறார்.
அந்தவகையில் 'ஸ்ரீகிருஷ்ணபுரத்தே நட்சத்திர திலகம், மாட்டுப்பெட்டி மச்சான், இரட்டைக்குட்டிகளுடன் அச்சன், பட்டாபிஷேகம், குரு, தென்காசிப்பட்டணம், கல்யாணராமன், திலகம், திருவனந்தபுரம் லாட்ஜ், ஆர்டினரி, ஒழிமுறி, ஆக்ஷன் ஹீரோ பிஜு, கார்பன், தி ப்ரீஸ்ட்' உட்பட 200-இற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாது சமீப காலமாக தொலைக்காட்சி தொடர்களில் பிசியாக நடித்து வந்தார்.
இந்நிலையில் இவர் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்துள்ளமை பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. அதாவது திருவனந்தபுரத்தில் வசித்து வந்த அவருக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரை அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி கொச்சு பிரேமன் உயிரிழந்துள்ளார். தற்போது 68 வயதாகின்ற நிலையில் இவர் மரணம் அடைந்திருக்கின்றார் கொச்சு பிரேமன். இவரின் மறைவுக்கு மலையாள ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
Listen News!