இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சூரி நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் தான் விடுதலை. இரண்டு பாகங்களாக உருவாகியுளள இப்படத்தின் ட்ரெய்லர் நேற்றைய தினம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
அதில் இடம்பெற்றுள்ள அந்த ஒரு நிர்வாணக் காட்சி அப்படியே உலகளவில் பிரபலமான ஹாலிவுட் படமான ஸ்கிண்ட்லர்ஸ் லிஸ்ட் படம் உருவாக்கிய தாக்கத்தை கொடுத்துள்ளதாக பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
கோஸ்ட் ஹன்ட் எனும் ஆப்பரேஷனை நடத்தி பெருமாள் வாத்தியாரை பிடிக்க போலீஸார் அங்கே உள்ள பெண்களை எல்லாம் அடித்து துன்புறுத்துவதோடு அவர்களின் ஆடைகளை களைந்து நிர்வாணப்படுத்தும் அந்த ஒரு காட்சி விடுதலை ட்ரெய்லரை சாதாரணமாக பார்த்துக் கொண்டிருந்தவர்களை ஒரு செகண்ட் ஸ்தம்பிக்க வைத்துள்ளது.
தமிழ்நாட்டு பெண்களின் உணர்வுகளை டச் செய்யும் விதமாக ஆடைகளை களைவது மட்டுமின்றி பெண்கள் அணிந்திருக்கும் தாலிகளையும் காவல் துறையினர் கழட்டும் காட்சிகள் பார்க்கும் போதே ஒரு வித அச்சத்தையும் படம் பேசப் போகும் ஆழத்தையும் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது.
1993ம் ஆண்டு ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் வெளியான Schindler's List திரைப்படம் பார்ப்பவர்களை பதை பதைக்க வைத்து விடும். ஒரு ரயில் முழுக்க ஆட்களை ஏற்றிக் கொண்டு நாஜி படைகளிடம் இருந்து காப்பாற்றும் ஆஸ்கர் ஸ்கிண்ட்லரின் வாழ்க்கை வரலாறு படமாக அந்த படம் உருவாகி இருக்கும். அதில், பெண்கள் செல்லும் ஒரு ரயில் பெட்டி வேறு ஒரு இடத்துக்கு இடம் மாறி செல்வதும், அங்கே பெண்களின் ஆடைகளை களைந்து அவர்களின் தலைமுடிகளை வெட்டும் கொடூரமான காட்சிகள் ரசிகர்களின் கண்களில் ரத்தத்தையே வரவழைத்திருக்கும்.
அப்படியொரு காட்சியாக விடுதலை படத்தில் வெற்றிமாறன் வைத்திருப்பதை பார்க்கும் போதே இந்த படத்துக்கு தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் உறுதி என்றே ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
Listen News!