• Sep 20 2024

காலி சீட்டிற்கு பக்கத்தில் உள்ள இருக்கையின் ரேட் அதிகமா..? படக்குழு கொடுத்த அதிரடியான விளக்கம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

'பாகுபலி' படத்தின் மூலம் பான் இந்திய நடிகராக மாறியுள்ள பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள வரலாற்றுக் கதையம்சம் கொண்ட ஒரு திரைப்படம் 'ஆதிபுருஷ்'. இப்படத்தை ஓம் ராவத் என்பவர் இயக்கி உள்ளார். 

மேலும் இராமாயணத்தை மையமாக வைத்து உருவாகி உள்ள இப்படத்தில் நடிகர் பிரபாஸ் ராமனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சீதா கதபாத்திரத்தில் நடிகை கீர்த்தி சனோன் நடித்து இருக்கிறார். அத்தோடு இராவணனாக பாலிவுட் நடிகர் சையிப் அலிகான் நடித்துள்ளார். 


இந்நிலையில் 'ஆதிபுருஷ்' படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் திரையரங்கின் ஒரு இருக்கையை ஆஞ்சநேயருக்காக காலியாக விட போவதாக ஏற்கெனவே பட தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு ஒன்றினை விடுத்துள்ளது. 

ஆதிபுருஷ் படக்குழுவின் உடைய இந்த அறிவிப்பு பாராட்டுக்கள் கிடைத்தாலும், மறுபுறம் இதனை நெட்டிசன்கள் பலரும் கடுமையாக ட்ரோல் செய்தும் வந்தனர். அதுமட்டுமல்லாது இது குறித்து சர்ச்சை ஒன்றும் வெடித்தது. 


அதாவது அனுமனுக்காக ஒதுக்கப்பட்டுள்ள அந்த காலி இருக்கைக்கு அருகில் உள்ள இருக்கைகள் மட்டும் அதிக தொகைக்கு திரையரங்குகளில் விற்பனை செய்யப்பட உள்ளதாக ஒரு தகவல் பரவி வந்தது. இதுகுறித்து தற்போது படக்குழுவே விளக்கம் அளித்துள்ளது.

அந்தவகையில் அனுமன் இருக்கைக்கு அருகில் உள்ள இருக்கைகளுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படும் என வெளியாகியுள்ள தகவலில் துளியும் உண்மையில்லை என கூறி, வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement