• Sep 20 2024

படுதோல்வியை சந்தித்த வாரிசு... நம்ம தளபதிக்கே இப்பிடி ஒரு நிலையா.. கவலையில் படக்குழு..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். 'நாளைய தீர்ப்பு' என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக களமிறங்கிய இவர் நடிப்பில் கிட்டத்தட்ட 60இற்கும் அதிகமான படங்கள் வெளியாகி இருக்கின்றன. 


அந்தவகையில் விஜய் நடிப்பில் வெளியான 'பீஸ்ட்' திரைப்படமானது எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியைப் பெற்றுக் கொடுக்காமையினால், தற்போது வெளியாகி இருக்கின்ற வாரிசு படத்தின் மீது ரசிகர்களுக்கு ஆரம்பத்திலிருந்தே அதிகளவான எதிர்பார்ப்புக்கள் இருந்து வந்தன. 


இவ்வாறு விஜய் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வந்த 'வாரிசு' திரைப்படமானது பொங்கல் பண்டிகையன்று பிரமாண்டமாக வெளிவந்தது. மேலும் இப்படமானது முதல் இரண்டு நாட்கள் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் அடுத்தடுத்த நாட்களில் குடும்ப ரசிகர்கள் மத்தியில் பெருமளவான வரவேற்பை பெறத் தொடங்கியது. 

இருப்பினும் இந்த வரவேற்பு, வசூல் அனைத்துமே தமிழ்நாட்டில் மட்டும் தான் எனக் கூறப்படுகின்றது. எது எவ்வாறாயினும் கடந்த இரு நாட்களுக்கு முன்பு எதிர்பார்த்த லாபத்தை வாரிசு படம் அதிகம் ஈட்டித் தந்துள்ளது.


இந்நிலையில் தான் தற்போது வாரிசு படம் படு தோல்வியை சந்தித்துள்ளதாக கூறப்படுகின்றது. அதாவது விஜய்யின் வசூல் கோட்டை என்று கூறப்படும் கேரளாவில் பெரும் சரிவை வாரிசு படம் சந்தித்துள்ளது. அதாவது வாரிசு திரைப்படம் கேரளாவில் எதிர்பார்த்த லாபத்தை கொடுக்காமல் சுமார் ரூ. 1.20 கோடி வரை நஷ்டத்தை கொடுத்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.


இதன் காரணமாக கேரளாவில் வாரிசு படம் படுதோல்வியை சந்தித்துள்ளது எனப் பலரும் கூறி வருகின்றனர். ஆனால் அதேநேரத்தில் அஜித்தின் துணிவு படம் நல்ல லாபத்தை கேரளாவில் கொடுத்துள்ளது என்று கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து வாரிசு படத்தின் மூலம் விஜய்யின் கேரளா பிசினஸ் பாதிக்கப்படுமா எனப் பலரும் தமது சந்தேகங்களை சமூக வலைத்தங்களின் வாயிலாக கேட்டு வருகின்றனர். அத்தோடு படக்குழுவினரும் இது குறித்து கவலையுடன் இருப்பதாக கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement