விஷால் நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள திரைப்படம் தான் 'லத்தி'. இத் திரைப்படமானது ஏற்கனவே ஒருமுறை ரிலீஸ் தேதி தள்ளிப்போன நிலையில் தான் பின்னர் வெளியானது. அத்தோடு வினோத் குமார் என்பவர் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்.
மேலும் விஷால் போலீஸாக நடித்து அசத்தியுள்ள இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அதுமட்டுமல்லாது விஷால் - யுவன் கூட்டணியில் உருவாகும் 15-ஆவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு விஷால் போலீஷாக நடித்து ஆக்ஷன் ஜானரில் உருவான இந்தப் படம் மிகப் பெரிய வெற்றிப் பெறும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது.
அத்தோடு விஷாலும் தனக்கு இது ஒரு கம்பேக் படமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார். ஆனால் லத்தி திரைப்படம் விஷாலின் எதிர்பார்ப்பு அனைத்தையும் பொய்யாக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. அந்தவகையில் விஷால் ஜோடியாக சுனைனா நடித்துள்ள இந்தப் படம் கடந்த 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இருப்பினும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் லத்தி சற்று பின்னடைவை சந்தித்துள்ளது. இந்நிலையில் ரூ. 23 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இப்படம் வெறும் ரூ. 3.40 கோடியை மட்டுமே வசூலித்துள்ளது. இதனால் படம் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் Theatrical வசூல் பொறுத்த வரை நஷ்டம் என்றாலும் விஷால் சாட்டிலைட், டப்பிங் போன்ற வியாபாரத்தில் படத்தை நல்ல விலைக்கு விற்றுவிட்டதாக தெரிவிக்கின்றனர். எதுஎவ்வாறாயினும் விஷால் நடித்த இப்படம் நஷ்டத்தில் ஓடுவதால் படக்குழுவினர் கடும் அப்செட்டில் உள்ளனராம்.
Listen News!