• Nov 14 2024

காதலனை பல்கணியில் நின்று எட்டிப் பார்க்கும் அனிகா... வெளியான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்... அப்போ படம் செம ஹிட் தான் போல..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து மக்கள் மத்தியில் பிரபல்யமான ஒருவரே அனிகா சுரேந்திரன். இவர் தமிழில் கௌதம் மேனன் இயக்கத்திலும் அஜித்தின் நடிப்பிலும் வெளியான “என்னை அறிந்தால்” என்ற படத்தில் திரிஷா-அஜித் அவர்களின் மகளாக நடித்து அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து ஜெயம் ரவியின் தங்கையாக “மிருதன்” என்ற திரைப்படத்தில் சிறப்பாக நடித்து அசத்தியிருந்தார். அதன் பின்னர் 'விஸ்வாசம்' படத்தில் மீண்டும் அஜித் மற்றும் நயன்தாரா அவர்களின் மகளாக நடித்து பல ரசிகர்களின் மனங்களில் குடி கொண்டார். 

இவ்வாறாக குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர் அதனைத் தொடர்ந்து கதாநாயகியாகவும் நடிக்க ஆர்வம் காட்டி வந்தார். அந்தவகையில் அனிகா சில ஷார்ட் பிலிமில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

ஷார்ட் பிலிமை தொடர்ந்து வெள்ளித் திரையிலும் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்ற ஆசையால் அவ்வப்போது வித்தியாசமான உடைகளில் கவர்ச்சி போட்டோ ஷூட் செய்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவு செய்து வருவார்.


இதன் பலனாகவோ என்னவோ தெரியவில்லை இவருக்கு அதிர்ஷ்டம் அடித்தது. ஆம், குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த நடிகை அனிகா தற்போது கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். அதாவது மலையாளத்தில் உருவாகியுள்ள 'ஓ மை டார்லிங்' எனும் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். 

இந்நிலையில் தற்போது இப்படத்தின் First லுக் போஸ்டர் வெளியாகி இருக்கின்றது. அதில் அனிகா செம க்யூட்டாக இருக்கின்றார். அதாவது பல்கணியில் நின்று இவர் தன்னுடைய காதலனை எட்டிப் பார்க்கும் வகையில் அந்த போஸ்டர் அமைந்திருக்கின்றது. 


இவ்வாறாக இப்போஸ்டர் ஆனது இப்போதிருந்தே அனிகா ரசிகர்கள் மீது இப்படத்தின் எதிர்பார்ப்பை தூண்டியிருக்கின்றன. அதுமட்டுமல்லாது போஸ்டரே இப்படி இருக்கு என்றால் படம் செம ஹிட் தான் எனக் கூறி அவரது ரசிகர்களும் அனிகாவிற்கு உற்சாகத்தை கொடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement