• Sep 20 2024

என்னது.. 'லியோ' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் காப்பியா..? வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் லியோ. இப்படத்தில் கதாநாயகியாக த்ரிஷா நடித்து வருகின்றார். மேலும் சஞ்சய் தட், கெளதம் மேனன், அர்ஜுன், மேத்திவ் தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலரும் நடித்து வருகின்றனர். 


இப்படமானது அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் லியோ படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு லியோ படத்திற்காக விஜய் பாடிய 'நான் ரெடி' பாடலின் ப்ரோமோ வீடியோ நேற்று முன் தினம் வெளியானது. இப்பாடலும் சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் பாடலும் ஒரே மாதிரி இருக்கிறது என்று கூறி நெட்டிசன்கள் பலரும் விமர்சனத்தை முன்வைத்திருந்தனர்.


இதனைத் தொடர்ந்து நேற்று இரவு 12மணிக்கு லியோ படத்தின் First Look போஸ்டர் வெளியானது. இப்போஸ்டரும் தற்போது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. அதாவது இந்தப் போஸ்டர் பார்ப்பதற்கு Game of Thrones வெப் தொடரில் வரும் கதாநாயகன் ஜான் ஸ்னோவ் போஸ்டர் லுக் போலவே இருக்கிறது எனக் கூறி நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement