விஜய் படம் என்றாலே பிரச்சனை இல்லாமல் வெளியாகாது என்பதும் அவரது அனைத்து படங்களும் கடைசி நேரத்தில் ஏதாவது ஒரு பிரச்சனை வந்து படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் தடுக்கும் என்பதும் அதன் பிறகு பேச்சு வார்த்தை நடத்தி கஷ்டப்பட்டு தான் ரிலீஸ் செய்வார்கள் என்பதும் வழக்கமாக நடந்து வரும் தொடர்கதையாக உள்ளது.
இந்த நிலையில் ’கோட்’ படத்திற்கு இதுவரை எந்தவிதமான பிரச்சனையும் இல்லாத நிலையில் தற்போது திடீரென ஒரு தயாரிப்பாளர் ’கோட்’ படத்தை ரிலீஸ் செய்ய விடமாட்டேன் என கூறி வருவதாக கூறப்படுவது திரையுலகில் வரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விஜய் நடித்து வரும் ’கோட்’ படத்தை இயக்கி வரும் வெங்கட் பிரபு, தனக்கு ஒரு படத்தை இயக்கி தருவதாக ஒப்புக்கொண்டு 50 லட்சம் ரூபாய் அட்வான்ஸ் பெற்றதாகவும் ஆனால் தன்னுடைய படத்தை இயக்காமல் ’கோட்’ படத்தை இயக்கச் சென்றதால் தனக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். மேலும் தான் கொடுத்த அட்வான்ஸ் பணத்தை கூட அவர் திருப்பி தர மறுப்பதாகவும் இதனால் ’கோட்’ படம் ரிலீஸ் நேரத்தில் பிரச்சினை செய்வேன் என்று அவர் மிரட்டல் விடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் வெங்கட் பிரபு அந்த தயாரிப்பாளரிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் விரைவில் அவருடைய 50 லட்சத்தை திருப்பி கொடுத்துவிடுவேன் என்று வாக்குறுதி அளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஒருவேளை வெங்கட் பிரபு அந்த பணத்தை கொடுக்காவிட்டால் ’கோட்’ ரிலீஸ் நேரத்தில் திடீரென அந்த தயாரிப்பாளர் நீதிமன்றத்திற்கு சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால் சுமார் 300 கோடி ரூபாய் செலவு செய்து ’கோட்’ படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர் ஐம்பது லட்சம் ரூபாய்க்காக படத்தை நிறுத்த விட மாட்டார்கள் என்று தான் கோலிவுட் திரை உலகினர் கூறி வருகின்றனர்.
Listen News!