தென்னிந்திய சின்னத்திரையில் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்த ரியாலிட்ரி ஷோ என்றால் அது பிக்பாஸ் மட்டுமே எனலாம். இது தமிழ், தெலுங்கு ,ஹிந்தி கன்னடம் ,மலையாளம் ஆகிய பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகின்றது. அந்த வகையில் தமிழில் 5 சீசன்கள் இதுவரை கடந்துள்ளது.
அக்டோபர் மாத தொடக்கத்தில் பிக் பாஸ் 6ம் சீசன் தொடங்க இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.அதில் போட்டியாளராக யாரெல்லாம் வருகிறார்கள் என பல செய்திகள் கடந்த சில வாரங்களாக வந்துகொண்டிருக்கிறது.
இந்நிலையில் தற்போது பிக் பாஸ் ப்ரோமோ ஒன்று வெளிவந்து இருக்கிறது. அதில் ராஜு தான் பேசி இருக்கிறார்.இந்த சீசன் கொஞ்சம் வித்தியாசமாக பொதுமக்களும் பிக் பாஸ் ஷோவில் கலந்துகொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் முறையாக மக்களாகிய நீங்கள் பங்கேற்க ஒரு அறிய வாய்ப்பு! 😎
உடனே https://t.co/EebJTRrsGG Login செய்து #BIGGBOSS-இல் கலந்து கொள்வதற்கான காரணத்தை வீடியோவாக பதிவு செய்து Upload செய்யுங்கள்.. 😊 #BiggBossTamil #BBTamilSeason6 #BiggBossTamil6 #பிக்பாஸ் pic.twitter.com/63qFGQqMAq
விருப்பம் உள்ளவர்கள் தங்கள் வீடியோவை அனுப்பலாம் என அறிவித்து உள்ளனர்.இதனால் பிக்பாஸ் சீசன் 6 களை கட்டப்போகுது எனஅனைவரும் ஆர்வமாக உள்ளதைக் காணலாம்.
Listen News!