• Sep 21 2024

முதல் நிகழ்ச்சியே எனது திருமணம் தான்... கல்யாணம் குறித்து ஓப்பனாக தெரிவித்த விஷால்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விஷால் கடைசியாக நடித்த சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை அவருக்குப் பெற்றுக் கொடுக்காததால் அவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள 'மார்க் ஆண்டனி' படத்தை எதிர்பார்த்து அவரது ரசிகர்கள் மிகவும் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.


இந்நிலையில் சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிற விடயம் என்றால் அது விஷாலின் திருமணம் குறித்த செய்திகள் தான்.  அதாவது நடிகை லட்சுமி மேனனுடன், விஷால் டேட்டிங் செய்து வருவதாக ஏற்கெனவே தகவல் வெளியாகி இருந்தன.


அந்தவகையில் இவர்கள் இருவரும் காதலித்து வருவதாகவும், விரைவில் லட்சுமி மேனனும், விஷாலும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கூறப்பட்டது. ஆனால் விஷால் இதனை மறுத்து பதிவு ஒன்றினையும் வெளியிட்டிருந்தார்.


அதுமட்டுமல்லாது தற்போது மீண்டும் தனது திருமணம் குறித்துப் பேசியுள்ளார் விஷால். அதாவது "எனது திருமணம் குறித்து வெளியாகும் தகவல்களில் எந்தவித உண்மையும் இல்லை. கட்டடம் கட்டி முடிந்தவுடன் முதல் நிகழ்ச்சியே எனது திருமணம் தான்" என ஓப்பனாக கூறியுள்ளார். 

Advertisement

Advertisement