• Nov 19 2024

'தி பினோமினல் ஷி' விருது வென்று சாதனை படைத்த முதல் தமிழ் நடிகை.. குவியும் பாராட்டுக்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இந்தியாவில் ஒவ்வொரு துறையிலும் சாதித்த தனித்துவமான பெண்களை கௌரவப்படுத்தும் விதமாக 'தி பினோமினல் ஷி' என்ற விருதை இந்திய தேசிய வழக்கறிஞர் சங்கம் கடந்த 2018இல் இருந்து வருடம் தோறும் 100 சாதனை பெண்களுக்கு வழங்கி கௌரவித்து வருகிறது.


குறிப்பாக கடந்த நான்கு வருடங்களாக வழங்கப்பட்டு வரும் இந்த விருதுக்கான பட்டியலில் பத்மஸ்ரீ விருது பெற்றவர்கள், மதிப்புமிகு உயர் நீதிமன்ற நீதிபதிகள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், வழக்கறிஞர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், 500 முன்னணி நிறுவனத்தின் சிஇஓக்கள், மிகப்பெரிய தொழிலதிபர்கள் பத்திரிகையாளர்கள் எனப் பல துறையை சேர்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவர்களில் நூறு பேர் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொரு வருடமும் இந்த விருது வழங்கப்பட்டு வருகின்றது.


அந்த வகையில் 5ஆவது 'தி பினோமினல் ஷி' விருது வழங்கும் விழா சமீபத்தில் இடம்பெற்றது. பல துறைகளைச் சேர்ந்த சாதனை பெண்மணிகளுக்கு இந்த விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன. அந்தவகையில் இந்த முறை தமிழகத்திலிருந்து முதன்முறையாக நடிகை லிசி ஆண்டனி இந்த தனித்துவமான பெண் விருதை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.


இவர் 'தங்க மீன்கள், பேரன்பு, நாடோடிகள் 2, நெற்றிக்கண், சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும், கட்டா குஸ்தி, ராங்கி, பொம்மை நாயகி' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 'தி பினோமினல் ஷி' விருது வென்ற இவருக்கு பிரபலங்கள், ரசிகர்கள் உட்படப் பலரும் தங்களுடைய பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement