கடந்த அக்டோபர் மாதம் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6ஆவது சீசனானது 50 நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஆரம்பத்தில் இருந்தே சண்டை,அடிதடி தள்ளுமுள்ளு, வாக்குவாதம் என போட்டியாளர்களிடையே சுவாரசியம் குறையாமல் நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கிறது.
அந்தவகையில் 21 போட்டியாளர்களுடன் ஆடம்பரமாக தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் தற்போது ஷிவின் கணேசன், அஸீம், ஆயிஷா, மணிகண்டன், ரச்சிதா, ராம், ஏடிகே, அமுதவாணன், கதிரவன், தனலட்சுமி, விக்ரமன், மைனா, ஜனனி ஆகியோர் மட்டுமே எஞ்சி உள்ளனர்.
இந்நிலையில் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது. அதில் இந்தவார வெளியேற்றப் பட்டியலுக்கான தேர்வு இடம்பெறுகின்றது. அதாவது மைனா, விக்ரமன், ஆயிஷா, adk ஆகியோர் ஆயிஷாவின் பெயரைக் கூறுகின்றனர். மேலும் தனலட்சுமி, மணிகண்டன், ரச்சிதா ஆகியோர் ராமின் பெயரைக் கூறுகின்றனர்.
அதுமட்டுமல்லாது அமுதவாணன், விக்ரமன், கதிரவன் ஆகியோர் அசீம் பெயரைக் கூறி இருக்கின்றனர். இவ்வாறாக இன்றைய ப்ரோமோ வெளிவந்திருக்கின்றது.
Listen News!