சமீபகாலமாக திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் கொலை செய்யப்பட்டு வருவது அதிகமாகி வருகின்றது.அந்த வகையில் கடந்த மே மாதம் 29ம் தேதி பிரபல பாடகரும் அரசியல்வாதியுமான சித்து அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இக் கொலை விசாரணையை அடுத்து பிரபல ரவுடி லாரன்ஸ் பிஸ்னோயிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் கனடாவை சேர்ந்த கோல்டி பிரார் உள்ளிட்ட தன்னுடைய கேங்கை சேர்ந்தவர்களுக்கு இந்தக் கொலையில் தொடர்பிருப்பதாக லாரன்ஸ் பிஸ்னோய் தெரிவித்திருந்தனர்.
இது தவிர அவர் ஒரு திடுக்கிடும் தகவலையும் கூறியிருந்தார். அதில் அவர் கூறியதாவது கடந்த 2018ல் பாலிவுட் நடிகர் சல்மான் கானை கொல்ல தான் 4 லட்சம் ரூபாயில் துப்பாக்கி வாங்கியதாக திடுக்கிடும் தகவலை லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
சல்மானை கொல்ல தன்னுடைய கூட்டாளி சம்பட் நெஹ்ராவிற்கு தான் உத்தரவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். அரியவகை மான்களை வேட்டையாடிய சம்பவத்தில் அவரை கொல்ல தான் முடிவெடுத்ததாகவும் லாரன்ஸ் தெரிவித்திருந்தார். முன்னதாக சல்மான் மற்றும் அவரது தந்தைக்கு கொலை மிரட்டல் விடுத்ததையும் அவர் ஒப்புக் கொண்டார்.
சல்மான் கொலை செய்த அரியவகை மான்கள், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் பஞ்சாபை சேர்ந்த பிஸ்னோய் பிரிவினரின் விருப்பத்திற்குரியவை என்றும் அவர் கூறியுள்ளார். இதன் காரணமாகவே சல்மானை கொல்ல தங்களுடைய கேங் முடிவெடுத்து செயல்பட்டதாகவும் அவர் கூறினார்.1998ல் தனது படத்தின் படப்பிடிப்பின்போது இந்த மான் வேட்டையில் சல்மான் ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- ஆஸ்கார் விருதை நானும் பெற வேண்டும் என நினைக்கின்றேன்- இசை வெளியீட்டு விழாவில் பேசிய விக்ரம்
- நயன்தாராவால் பொன்னியின் செல்வன் திரைப்படத்திலிருந்து விலகிய சிம்பு- ஓவர் சீன் போட்ட விக்ரம் மற்றும் ஜெயம்ரவி
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!