சமீபகாலமாக திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் இறப்புக்குள்ளாவது ரசிகர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது.
அந்த வகையில் தற்பொழுது அமெரிக்க நடிகர் ஒருவர் இறந்த செய்தியானது ரசிகர்களிடையே பரவலாக பேசப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் மாஃபியா திரைப்படமான "தி காட்பாதர்" படத்தில் கேங்ஸ்டர் சோனி கார்லியோனாக நடித்தவர் தான் அமெரிக்க நடிகர் ஜேம்ஸ் கான். இப்படத்தில் சிறப்பாக நடித்து ஆஸ்கர் விருது, கோல்டன் குளோபல் விருது, எம்மி விருது என அந்த படத்திற்காக மட்டும் பல விருதுகளை பெற்றார்.
ஜேம்ஸ் கானின் திரைப்பயணம் ஆறு தசாப்தங்களாக நீடித்துள்ளது. உளவியல் த்ரில்லர் படமான "மிசரி" முதல் நகைச்சுவை படதான "எல்ஃப்" வரை திரைப்படங்களில் மிகவும் ரசிக்கும் படி நடித்திருப்பார் ஜேம்ஸ். கடந்த ஆண்டு, அவர் எலன் பர்ஸ்டினுக்கு ஜோடியாக "குயின் பீஸ்" என்ற காதல் நகைச்சுவை படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில், ஜேம்ஸ் கானின் ட்விட்டர் பக்கத்திலிருந்து நடிகர் ஜேம்ஸ் கான் நேற்று மாலை இறந்து விட்டதாக அவரது குடும்பத்தினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த செய்தி காட்டுத்தீ போல பரவியதை அடுத்து, அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- வாரிசு திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாடில் இருந்து வெளியாகிய லேட்டஸ்ட் கிளிக்ஸ்- யாரெல்லாம் நிற்கிறாங்க என்று பாருங்க
- மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் ரண்வீர்- இன்று முதல் எதில் வெளியாகவுள்ளது தெரியுமா?
- ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் புதிய படத்தின் பெயர் என்ன தெரியுமா?- வெளியான லேட்டஸ்ட் தகவல்!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!