• Sep 20 2024

கமல்ஹாசனின் விக்ரம் படத்திற்காக அரசு கொடுத்த அனுமதி- விஜய் , அஜித் படத்திற்கு கூட இல்லை..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் சில வருடங்கள் தாண்டி இன்று வெளியாகியுள்ள திரைப்படம் தான் விக்ரம்.

இப் படம் இன்று கோலாகலமாக எல்லா மொழிகளிலும் உலகலாவியரீதியில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகியுள்ளது.

மேலும் கமல்ஹாசன் அவர்கள் ஒரு மொழியை கூட விடாமல் அனைத்து மொழிகளிலும் புரொமோஷனுக்கு சென்றார்.

லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத் தற்போது படத்தை ரசிகர்களுடன் அமர்ந்து முதல் நாள் முதல் காட்சி பார்த்து வருகின்றார்கள்.

அத்தோடு படம் ரிலீஸ் ஆகிவிட்டது, ரசிகர்களும் திரையில் ஆண்டவரை சில வருடங்களுக்கு பிறகு காண்பதால் படு கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.

தற்போது என்ன தகவல் என்றால் நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படத்திற்கு 3 நாள் சிறப்பு காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி கொடுத்துள்ளது. 3, 4, 5 என மூன்று நாட்கள் விக்ரம் பட சிறப்பு காட்சிகள் ஒளிபரப்பாக இருக்கிறதாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement