• Nov 19 2024

நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகிய “தி கிரே மேன்” திரைப்படத்தின் திரைவிமர்சனம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

அவெஞ்சர்ஸ்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கிய ருஸ்ஸோ பிரதர்ஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் “தி கிரே மேன்”. இப்படத்தில் கிறிஸ் ஈவான்ஸ், ரயன் காஸ்லிங், அனா டி அர்மாஸ் உள்ளிட்ட பல ஹாலிவுட் நட்சத்திரங்களுடன் நடிகர் தனுஷும் நடித்திருக்கின்றார்.

சமீபத்தில் படத்தின் பிரீமியர் மற்றும் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில், படக்குழுவினருடன் நடிகர் தனுஷ் கலந்து கொண்டார். இந்த நிலையில் இப்படமானது இன்றைய தினம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்திலும் வெளியாகி உள்ளது.

அதன்படி இப்படத்தின் கதைககளம் என்னவென்று பார்ப்போம்.
சிக்ஸ் எனப்படும் ரயன் கோஸ்லிங் தற்போது நல்லவராக இருந்தாலும் ஒரு காலத்தில் குற்றவாளியாக இருந்தவர். அவர் நல்லவரும் கூட, கெட்டவரும் கூட. அவரை முழுக்க முழுக்க கெட்டவரான லாய்டுடன் மோத விடுகிறார்கள்.

சிஐஏவில் இருக்கும் சிலர் செய்யும் கெட்ட விஷயங்களால் சிக்ஸ் மற்றும் லாய்டு இடையே மோதலை ஏற்படுத்துகிறார்கள். தாங்கள் செய்த கெட்டதை மறைக்க மேலும் மோசமானவற்றை சிஐஏ ஆட்கள் செய்கிறார்கள். தங்களின் தனிப்பட்ட விஷயங்களுக்காக வேலை செய்கிறார்கள்.

இதனால் சிக்ஸ் மற்றும் லாய்டு இடையே பயங்கர மோதல் ஏற்படுகிறது. இந்த மோதலினால் என்ன நடக்கின்றது என்பதே படத்தின் மீதிக் கதை எனலாம்.

படத்தை பற்றிய அலசல்

மார்வெல் படங்களுக்கு பெயர் போன ருஸோ சகோதரர்கள் தி கிரே மேனில் லைட்டாக பாதை மாறியிருக்கிறார்கள். யாருக்கும் தீங்கு செய்யாத அவர்களின் சூப்பர் ஹீரோக்களை போன்று இல்லாமல் இந்த ஹீரோக்களால் பல அழிவுகள் ஏற்படுகின்றது.

பொதுவாக கூறப்போனால் ஆக்ஷன், ஆக்ஷன், ஆக்ஷன் தான் தி கிரே மேன். இதனால் ஆக்ஷன் காட்சிகளை தவிர மற்றவை ரசிகர்களை பெரிதும் ஈர்க்கவில்லை. இரண்டு பிரபல நடிகர்கள் மற்றும் நல்ல நடிகர்கள் இருந்தும் திரைக்கதை கை கொடுக்கவில்லை எனலாம்.

மீசை வைத்திருக்கும் கிறிஸ் இவான்ஸ் பேசும் சில வசனங்கள் காமெடியாக இருந்தாலும் தனுஷை பார்த்து என் செக்ஸி தமிழ் நண்பர் என்கிறார். இவரது காமெடி காட்சிகள் ரசிகர்களை சலிப்படைய செய்துள்ளது.தனுஷ் வரும் ஆக்ஷன் காட்சிகள் அருமையாக எடுக்கப்பட்டுள்ளது எனலாம்.

சில காட்சிகளில் மட்டுமே கவுரவத் தோற்றத்தில் வந்தாலும் மனதில் இடம் பிடிக்கிறார் தனுஷ். எனக்கு கதை எல்லாம் முக்கியம் இல்லை ஆக்ஷன் தான் வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு தி கிரே மேன் ஃபுல் மீல்ஸ் ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement