• Nov 19 2024

திரையுலக வளர்ச்சிக்கு காரணம் தெருவில் வேலை பார்க்கும் தொழிலாளர்களே; மனம் திறந்து பேசிய வடிவேலு

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் புகழ் பெற்ற நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் வைகைப்புயல் வடிவேலு. இவர் நடிகர் மட்டுமல்லாது சிறந்த பாடகரும் கூட. பல வித்தியாசமான கதாபாத்திரங்களை தனக்கு ஏற்ற பாணியில் பிறர் மனதை புண்படுத்தாமல் நடிப்பதன் மூலம் மக்களை சிரிக்க வைக்கின்ற பெருமை இவரையே சாரும்.

நடிகர் ராஜ்கிரனின் நடிப்பில் வெளியான 'என் ராசாவின் மனசிலே' என்ற திரைப்படத்தில் முதல் முதலாக நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்த இவர் தொடர்ந்து 'ப்ரண்ட்ஸ், சச்சின், வின்னர், மருதமலை, கிரி, பாரதி கண்ணம்மா' எனப் பல படங்களில் முன்னணி நட்சத்திரங்கள் பலருடன் இணைந்து நடித்துள்ளார். படங்களில் இவர் பேசுகின்ற நகைச்சுவை வசனங்கள் எத்தனை வருடம் ஆனாலும் நம் மனதை விட்டு அகல்வதில்லை.

அந்த அளவுக்கு நடிகர் வடிவேலு அவர்கள் தன்னுடைய நகைச்சுவைப் பாணியால் கோடிக்கணக்கான ரசிகர்களை இன்று வரை மகிழ்வித்த வண்ணமே இருக்கின்றார். அவருடைய பல ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் பல ஏற்ற தாழ்வுகளை அவர் சந்தித்திருக்கிறார். தற்போது இவர் சினிமாவில் தன்னுடைய 35 வருட கால அனுபவத்தை நிறைவு செய்துள்ளார். இந்த நிலையில் இப்பொழுது அவர் தன்னுடைய 35 வருட சினிமா வளர்ச்சி பற்றிய ரகசியங்களை தனது ரசிகர்களுக்கு வெளிப்படையாக கூறி வருகின்றார்.

அதாவது பொதுவாகவே நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்களுக்கு மிகவும் முக்கியமானது அவர்களுடைய பாடி லாங்குவேஜ் தான். அது வடிவேலுவிற்கு இயல்பாகவே வரக்கூடியது. அப்பேற்பட்ட பாடி லாங்குவேஜ் வைத்து தான் அவர் ரசிகர்களை சிரிக்க வைத்து இன்று வரை தமிழ் சினிமாவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்திருக்கிறார்.

இவர் ஒரு நடிகர் மட்டுமல்லாது சிறந்த பாடகரும் கூட என்பதற்கு எடுத்துக்காட்டாக இவருடைய முதல் பாடலே அமைந்து இருக்கின்றது. அதாவது "போடா போடா புண்ணாக்கு" என்ற பாட்டின் மூலம் ஆரம்பித்த அவருடைய பயணம் இன்று 35 ஆண்டுகள் கடந்து வந்திருந்தாலும் தொடர்ந்து '23ஆம் புலிகேசி, நாய் சேகர்' போன்ற படங்கள் வரை நீண்டு கொண்டிருக்கிறது. ஒரு நகைச்சுவை கலைஞனாக இருந்த அவர் தன்னுடைய நடிப்பின் திறமையினால் இன்று படத்தினுடைய கதாநாயகன் என்று கூறுமளவிற்கு உயர்ந்திருக்கிறார். இவ்வாறான தனது சினிமா வளர்ச்சிக்கு காரணம் மதுரை தான் எனக் கூறுகின்றார் வடிவேலு.

மேலும் இது தொடர்பாக அவர் கூறுகையில், "எனக்கு இந்த மாதிரி பாடி லாங்குவேஜ் வருவதற்கு காரணம் மதுரையில் உள்ள ரிக்ஷாகாரர்களும், தெருவில் வேலை பார்க்கும் தொழிலாளர்களும் தான்" எனக் கூறியுள்ளார். நடிகர் வடிவேலு அவர்கள் மேலும் தெரிவிக்கையில், தான் இது போன்று நகைச்சுவை கலந்த பாணியில் பேசுவதை கற்றுக் கொண்டது மதுரை மண்ணில் தான் எனவும் அதுதான் என்னுடைய சினிமா திரையுலக வளர்ச்சிக்கு காரணமாக இருப்பதாகவும் எதையும் மறைக்காது மனம் திறந்து உருக்கமாக பேசியுள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement