• Sep 20 2024

என் வாழ்வின் மகிழ்ச்சியான நாள்-லண்டனில் நடைபெற்ற சைக்கிளிங் போட்டியில் வெற்றி பெற்ற ஆர்யாவின் அணி

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபம் ஆர்யா. இவர் ஆரம்பத்தில் காதல் கதைக்களமாக கொண்ட திரைப்படங்களையே தெரிந்தெடுத்து நடித்து வந்தார். இதனால் பல ரசிகைகளின் கனவு நாயகனாகவும் வலம் வந்தார்.

இதனைத் தொடர்ந்து சமீபகாலமாக ஆக்ஷன் திரைப்படங்களைத் தெரிந்தெடுத்து நடித்து வருகின்றார்.இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகிய சார்பாட்டா பரம்பரை டெடி ஆகிய திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றிருக்கின்றன.


இதனைத் தொடர்ந்து தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகின்றார்.இந்நிலையில் இந்தியா சார்பாக லண்டனில் நடந்த 1450 கி.மீ தூர நெடும்பயண சைக்கிளிங் போட்டியில் ஆர்யாவின் அணி கலந்துகொண்டது. அதில் போட்டி தூரத்தை ஆர்யாவின் அணியினர் கடந்துள்ளனர். 

இது சம்மந்தமாக சமூகவலைதளத்தில் அறிவித்துள்ள ஆர்யா “என் வாழ்வின் மகிழ்ச்சியான நாள். எனக்கு ஆதரவாக இருந்த குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு நன்றி” எனக் கூறியுள்ளார். இவருக்கு பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement