விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களுக்கு பின் இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு. இப்படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.
ஏ.ஆர்.ரஹ்மான் அப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக குஜராத்தைச் சேர்ந்த தெலுங்கு நடிகை சித்தி இத்னானி நடிக்கிறார். ராதிகா முக்கிய வேடத்தில் சிம்புவின் அம்மாவாக நடிக்கிறார்.ஏற்கனவே இந்த படத்தின் பல லுக் போஸ்டர்கள் & முன்னோட்டம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.
இந்த படத்தின் ஆடியோ உரிமையை திங்ஃக் மியூசிக் நிறுவனம் ஏற்கனவே கைப்பற்றியுள்ளது.உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம், வெந்து தணிந்தது காடு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை கைப்பற்றியுள்ளது.
மேலும் இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த படத்தின் பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்து விட்டதாக ஏற்கனவே சிம்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் நடிகை சித்தி இத்னானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இயக்குநர் கௌதம் மேனன் உடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து 'வெந்து தணிந்தது காடு' படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்து விட்டதாக கூறியுள்ளார். மேலும் சொந்த குரலில் டப்பிங் பேசியுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் சொந்த குரலில் டப்பிங் பேச வைத்ததற்கு கௌதம் மேனனுக்கு நன்றி என்றும் கூறியுள்ளார்.
பிற செய்திகள்
- சாக்லேட் பாய் ஆர்யாவுக்கு கேப்டன் ஜெர்சியை வழங்கி கௌரவித்த சூர்யா-இது என்னங்க இப்படி கொஞ்சிக்கிறாங்க?
- அடடே நம்ம லைலாவா இது?- இன்னும் அப்படியே இருக்காங்க – பாராட்டி வரும் ரசிகர்கள்
- கவர்ச்சியில் எல்லை மீறும் மௌனராகம் சீரியல் நடிகை- பிஞ்சிலேயே நல்லா பழுத்திருச்சு போல
- நண்பர்கள் சூழ தனது பிறந்தநாளை சிறப்பித்த நடிகை மாளவிகா மோகனன்
- என் மகளுக்கு நான் அறிவுரை கூறினால் பிடிக்காது- அதிதி பற்றி ஷங்கர் குறிப்பிட்ட முக்கிய விடயம்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!